சாலை வசதியில்லாத மலைகிராமத்திற்க்கு 20,கிமீ.நடந்துசென்று மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்த நீதிபதி கார்த்திக்
சாலைவசதியில்லாதமலைகிராமத்திற்க்கு 20,கிமீ.நடந்துசென்று மலைவாழ்மக்களின் குறைகளை கேட்டறிந்த நீதிபதி கார்த்திக்.

கொடைக்கானல் அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்திற்கு சுமார் 20 கிலோ மீட்டர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை நீதிபதி கார்த்திக் கேட்டறிந்தார்.
கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் ஊராட்சியைச் சேர்ந்தது மூங்கில் பள்ளம் மற்றும் மஞ்சம்பட்டி. இங்கு செல்வதற்கு வாகன வசதிகள் கிடையாது மன்னவன் ஒரு கிராமத்திலிருந்து கீழான வயல் என்ற இடம் வரை வாகனத்தில் சென்று பின்னர் அங்கிருந்து மூங்கில் பள்ளம் என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமம்ச் சென்று அதன் பின்னர் மஞ்சம்பட்டியை சென்றடைய வேண்டும். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த கிராமங்களுக்கு நீதிபதி கார்த்திக், உறுப்பினர்களுடன் நடந்துச் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

அவருடன் வனச்சரகர்கள் சிவக்குமார், ஞானசேகர், வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் கேசவன் உட்பட வக்கீல்கள் நக்சல் தடுப்பு பிரிவினர் காவல்துறையினர் நீதிமன்ற ஊழியர்கள் என 60க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர். இங்கு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட நீதிபதி பொது மக்களின் குறைகளை கேட்டார்.
அவர்கள் தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மின்சாரம் சாலை வசதி பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மனுக்களை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட நீதிபதி இது குறித்து உரிய துறைகளிடம் அணுகி விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். சாலை வசதி இல்லாத கிராமத்திற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கேட்டறிந்த நீதிபதிக்கு அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நிருபர்.R.குப்புசாமி.


