திருச்சிமாநகரில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக ஸ்டூடன்ட்சாலையில் Happysalai மக்கள் மனமகிழ்ச்சி நிகழ்ச்சி
திருச்சிமாநகரில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக ஸ்டூடன்ட் சாலையில் Happysalai மக்கள் மனமகிழ்ச்சி நிகழ்ச்சி.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்காக மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாப்படும் வகையில் தமிழக காவல்துறை மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி ‘(Happy Street)’மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதேபோல் திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள ஸ்டுடெண்ட் சாலையில், திருச்சி மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட Happy Salai நிகழ்ச்சியை, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.சத்யபிரியா IPS. அவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் திரு.அன்பழகன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், மாணவ மாணவிகள், இளைஞர் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


