கன்னியாகுமரி மாவட்டம்பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம்பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேர் கைது

பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிப்பதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட SP. Dr. R.ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்

- Advertisement -

இந்நிலையில் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் நீதிவலை பத்திரிக்கையின் நிருபர்கள் என்றுக்கூறி, புகார்தாரரின் நிதி நிறுவனத்தில் அதிகப்படியான வட்டி வாங்குவதாக புகார் வந்துள்ளது,இது தொடர்பாக பத்திரிக்கையில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் தரவேண்டும் எனக்கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க மறுத்த ஜஸ்டின் ராஜ்யை அச்சுறுத்தி சட்டை பையில் இருந்த ரூபாய் 5,000 – த்தை எடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ராஜ் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரத்தை சேர்ந்த ஆன்றனி (51), கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுனில் (33), கருவாவிலை பகுதியை சேர்ந்த லால் (36), ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜா (37), கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சுரேஷ் கோபி (52), திருவட்டார் பகுதியை சேர்ந்த பெல்வின் ஜோஸ் (41), கீழபெருவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) மற்றும் சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த சகாய போஸ்கோ (58) ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எட்டு பேரையும் கைது செய்தனர்.

பத்திரிக்கை நிருபவர்கள் எனக் கூறி போலியாக இவ்வாறு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.