போதை பொருள் இல்லா தமிழகம் உருவாக மத்தியமண்டலத்தில் IG.G.கார்த்திகேயன் IPS முன்னிலையில் 4,192,கிலோ கஞ்சாஅழிப்பு.

போதைபொருள் இல்லா தமிழகம் உருவாக மத்தியமண்டலத்தில் IG.G.கார்த்திகேயன் IPS முன்னிலையில் 4,192,கிலோகஞ்சாஅழிப்பு.

தஞ்சாவூர் அடுத்துள்ள செங்கிப்பட்டி அருகே அயோத்திப் பட்டியில் 4,192 கிலோ கஞ்சா பொருட்கள் அழிக்கப்பட்டன.கடந்த ஆண்டுகளில் காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட 267, வழக்குகளில் காவல்துறையால் மத்திய மண்டலத்தில் பறிமுதல்செய்த 4,192, கிலோ கஞ்சா பொருட்கள் தஞ்சாவூர் அருகே அயோத்திப் பட்டியில் அழிப்பு, கொலை,கொள்ளை சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என திருச்சி மத்திய மண்டல IG.G.கார்த்திகேயன் IPS. நிருபர்களுக்கு பேட்டி.

கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால்காணொளி காட்சி மூலமாக அளிக்கும் நிகழ்ச்சி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலமாக அழிக்கப்பட்டது, இந்நிலையில் தஞ்சாவூர் அருகே அயோத்தி பட்டியில் திரை மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது திருச்சி,தஞ்சை , அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 267, வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4,192, கிலோ கஞ்சா திருச்சி மத்திய மண்டல IG. G.கார்த்திகேயன் IPS முன்னிலையில் அழிப்பட்டது

- Advertisement -

பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி மத்திய மண்டல IG.G. கார்த்திகேயன் IPS அளித்த பேட்டியில்,திருச்சி மத்திய மண்டலத்தில் 267 வழக்குகளில் 4,192 கிலோ கஞ்சா பொருட்கள் அழிக்கப்பட்டது, முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு தனிப்படை அமைத்ததால் தான் இந்த அளவிற்கு கஞ்சா பொருட்கள் பிடிபட்டுள்ளது, இலங்கைக்கு கடத்தி செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கையால் தான் தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தமாக கஞ்சா பொருட்கள் பிடிக்க முடிந்தது.

வடமாநிலங்கள், ஆந்திராவில் இருந்து தான் கஞ்சா வருகிறது. கொலை,கொள்ளை சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது, இதன் மூலம் குற்ற நடவடிக்கைகளை குறைக்கலாம் என தெரிவித்தார்.மத்தியமண்டல காவல்துறை அதிகாரிகள் உனிருந்தனர்.

நிருபர்.சக்திவேல். தஞ்சை.

Leave A Reply

Your email address will not be published.