திருச்சியில் வீட்டின் மேற்க்கூரைஇடிந்துவிழுந்து சிறுமிகள் உள்ப்பட 4 பெண்கள் உயிரிழந்த சோகம்.
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாநகரில் அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து (டிச.,31) சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் உறங்கி உள்ளனர்.
1972,ம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. திருவானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு நிருபர்.மு.பாண்டியராஜன்.