2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணி நியமனம் பெற்று, பணியில் இருக்கும் போது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சக காவலர்கள் மூலம் 2009 பேட்ச் காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு தொடங்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த
தெய்வத்திரு நவீன் குமார் அவர்கள் 2009 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிநியமனம் பெற்று பணிபுரிந்து வந்த நிலையில் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார் எனவே அவரின் குடும்ப நலன் கருதி 2009 பேட்ச் உதவும் அன்பு உள்ளங்கள் குழு மூலம் கடந்த 28/06/2024 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த காவலரின் குடும்பத்தினரிடம் நிதி உதவியாக
23,75,947 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
இது வரை 2009 பேட்ச் காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு வாயிலாக தற்போது வரை 8,59,61,946 * கோடி ரூபாய் பணியின் போது மறைந்த *36 காவலர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில முழுவதும் குழுவின் சார்பில் நிதி உதவியை பெறுவதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில முழுவதும் இருந்து பெறப்படும் நிதி உதவி குறித்த கணக்கின் வரவு செலவுகளை குழுவின் ஒருங்கிணைப்பாளர், தலைமை காவலர் திரு.பரமசிவன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.
சட்ட ஆலோசகர்.K.அருணாச்சலம்.