இளைஞர்கள் மாணவர்கள் மாணவிகளுக்கு 15 நாள் கோடைகால விளையாட்டு பயிற்சிமுகாம் ASP. G.ஹரிகுமார் விழிப்புணர்வு ஊக்க உரை
.
சுபம் அறக்கட்டளை ,தமன்னா என்டர்பிரைஸ்,வலிமைஅரக்கட்டளை, சார்பாக இளைஞர்கள் மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் விளையாட்டு, கராத்தை, யோகா, போன்ற பயிற்சி முகாம் ஈக்காடு சி.எஸ். ஐ.கௌடி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழாவிற்கு திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் IAS, அவர்களும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.G. ஹரிகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி முகாமில் வெற்றி பெற்ற தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
விழாவில் காவல்துறை ASP. திரு G.ஹரிகுமார் அவர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊக்க உரை ஆற்றினார் மாணவர்கள் வேகத்துடனும் விவேகத்துடனும் துடிப்புடன் செயல்பட்டு கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி இலக்கை அடைய புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தரும் அளவிற்கு வெற்றியாளர்களாக மாணவச் செல்வங்கள் விளங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இந்த 15 நாள் பயிற்சி முகாம் ஆனது அந்த பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கு கோடைகால பயிற்சி முகாமாக உடல் ஆரோக்கியம் பெற்று மன ஆரோக்கியத்துடன் அறிவாற்றலோடு செயலாற்ற மிக பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாக இந்த பயிற்சி முகாம் நிகழ்ச்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சுபம் அறக்கட்டளை மற்றும் தமன்னா என்டர்பிரைஸ் மற்றும் வலிமை அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த 15 நாள் பயிற்சி முகாம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பது பாராட்டுக்குரியது.
நிருபர்.AR.முருகேசன்.