11,பேர் உயிர்பலி வாங்கிய கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி பாதுகாப்புவேலி அமைக்க ஏற்பாடு.
கொடைக்கானல் அஞ்சு வீடு அருவிப்பகுதியில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு, அருவியில் குளிக்க செல்லும் பாதை அனைத்தும் வேலி அமைத்து அடைக்கப்பட உள்ளதாக முடிவு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும், தமிழகமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வாடிக்கையான ஒன்று, இந்நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள அஞ்சு வீடு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற அருவியாகும், வாகனங்களில் பயணம் செய்து இந்த அருவிப்பகுதியை அடைந்து சிறிது தூரம் நடந்தது தான் இந்த அருவிக்கு செல்ல முடியும், மேலும் கொடைக்கானலில் இருந்து மழைக்காலங்களிலும், இதர காலங்களிலும் வெளியேறக்கூடிய அனைத்து நீரோடைகள் சிற்றோடைகளின் நீரானது, இந்த அஞ்சு வீட்டு அருவியில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பழனிக்கு செல்லும், மேலும் பல ஆண்டுகளாகவே அஞ்சு வீடு அருவியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் பழிவாங்கும் அருவியாகவே மாறி உள்ளது இந்த அஞ்சு வீடு அருவி,
இந்நிலையில் இதுவரை 11 நபர்கள் இந்த அஞ்சு வீட்டு அருவியில் குளிக்கும் போது உயிரிழந்து உள்ளனர், இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர், சக நண்பர்களுடன் அஞ்சு வீடு அருவிக்கு சென்ற இந்த மாணவர்கள் அருவியில் குளிக்கும் பொழுது ஆழமான பகுதியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து அஞ்சு வீடு அருவிஅருகில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் மாவட்ட வன அலுவலர், கோட்டாட்சியர் , கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் , காவல் துறையினர் , மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் அஞ்சு வீடு அருவியினை ஆய்வு செய்தனர், அப்போது வனத்துறையினர் தங்களுக்கு இந்த இடம் சொந்தம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து உடனடியாக வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அஞ்சு வீடு அருவியை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு குளிக்கும் இடம் செல்லக்கூடிய அனைத்து வழித்தடங்களும் வேலியிட்டு அடைக்கப்படும் என்றும் ஆய்வு மேற்கொண்ட அனைத்துதுறை அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிருபர்.R.குப்புசாமி.